Pakkiri Tamil Movie Online | Movie Review in Tamil | பக்கிரி திரைவிமர்சனம் ஒரு பார்வை

0

தனுஷ், பெரிநிஷ் பிஜோ, எரின் மொரியார்ட்டி இயக்கம் – பென் ஸ்காட் இசை – நிகோலஸ் எரெரா, அமித் திரிவேதி, தயாரிப்பு – பிரியோ பிலிம்ஸ், எம் கேபிட்டல் வென்சர்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், டிஎப்1 ஸ்டுடியோஸ். “The Extraordinary Journey of the Fakir” என்று ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் எடுக்கப்பட்டு கடந்த வருடம் மே மாதம் வெளியான இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பக்கிரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது.கனடா நாட்டை சேர்ந்த இயக்குனர் கென் ஸ்காட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன் ஸ்டிக்கி பின்ஜர்ஸ், ஸ்டார்பக், டெலிவரி மேன், அன்பினிஷ்ட் பிசினஸ் ஆகிய ஆங்கிலப் படங்களை இயக்கி உள்ளார்.கனடா நாட்டு இயக்குனராக இருந்தாலும் இந்தியாவின் மும்பையில் வசிக்கும் ஒரு ஏழைக்குடும்பம், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆசை என சென்டிமென்ட் டச்சுடன் இந்தப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மும்பையில் லாண்டரி துணிகளை வெளுக்கும் ஒரு பெண்மணி. பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துக் கரம் பிடித்து மகனுடன் தனியாக வசிக்கிறார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மகன் தன்னால் ஏழையாக இருக்க முடியாது என மேஜிக் செய்வதாகக் கூறி ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள். அந்த இளைஞன்தான் தனுஷ், தன் அப்பா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று அம்மாவிடம் இருந்து தெரிந்து கொள்கிறான்.

அம்மாவின் மரணத்திற்குப் பிறகு தன் அப்பாவைத் தேடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். அங்கிருந்து அவர் இங்கிலாந்து, ஸ்பெயின், லிபியா என சுற்ற வேண்டியிருக்கிறது. தன் பயணத்தில் அப்பாவைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ராஞ்சனா, ஷமிதாப் படங்களின் மூலம் இந்திய அளவில் பேசப்பட்டவர் தனுஷ். இந்தப் படம் மூலம் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பேசப்பட்டவராகி இருக்கிறார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனுஷ் இதற்கு முன் நடித்த படங்களிலிருந்து இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு வேறு விதமாகத் தெரிகிறது. ராஜகுமரகுரு லட்சுமிபதி என்பதுதான் படத்தில் தனுஷின் பெயர். ஆனால், பக்கிரி என எதற்குத் தலைப்பு வைத்தார்கள் என்பதன் காரணம் தெரியவில்லை. பாரிஸில் இறங்கியதும் ஒரு காதல், பின் அதில் பிரிவு, தெரியாமல் இங்கிலாந்திற்குள் நுழைந்து மாட்டிக் கொள்வது, ஸ்பெயினுக்கு அனுப்பப்படுவது என கதை சுவாரஸ்யமாக செல்கிறது.

குடும்ப கதையாக தொடங்கி காதல் காட்சிகள் என கதை நகர்ந்து செல்கிறது. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Tags: pakkiri movie, pakkiri movie review, pakkiri tamil movie, pakkiri hd movie online, pakkiri tamil movie com, pakkiri tamil movie download, pakkiri tamil movie download tamilrockers, pakkiri tamil movie songs download, pakkiri tamil movie for download, pakkiri tamil movie songs for download, pakkiri tamil movie in tamilyogi, pakkiri tamil movie in tamil, pakkiri tamil movie in tamilrockers, pakkiri tamil movie in tamilgun, pakkiri tamil movie in telugu, pakkiri tamil movie in hindi, pakkiri tamil movie in hd, pakkiri tamil movie in hindi dubbed, pakkiri tamil movie in hotstar, pakkiri tamil movie youtube, pakkiri tamil movie on youtube, pakkiri tamil movie online, pakkiri tamil full movie on youtube, pakkiri tamil movie to download, pakkiri tamil movie whatsapp status

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here